Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

அரிய வகை உயிரினங்கள் கடத்திய 2 பேர் கைது

அரிய வகை உயிரினங்கள் கடத்திய 2 பேர் கைது

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் திருச்சிக்கு கடத்தி வரப்பட்ட அரிய வகை வன உயிரினங்களை சுகங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பகிரவும் WhatsApp Facebook

தாய்லாந்தில் இருந்து விமானத்தில் திருச்சிக்கு கடத்தி வரப்பட்ட 16 மலைப்பாம்புகள் உள்பட 25 அரிய வகை உயிரினங்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததோடு, பயணிகள் 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து கொழும்பு வழியாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் திருச்சி வந்தடைந்தது. அதில் அரிய வகை வன உயிரினங்கள் கடத்தி வரப்படுவதாகக் கிடைத்த தகவலையடுத்து, சுங்கத்துறை அதிகாரிகள் பயணிகளின் உடைமைகளைச் சோதனையிட்டனர்.

அப்போது, இரண்டு பயணிகளின் உடைமைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 16 பால் மலைப்பாம்புகள் (Ball Pythons), 5 கருப்பு-வெள்ளை டெகு வகை கொறித்துண்ணிகள் (Black-and-white Degus), ஒரு ஸ்னோ இகுவானா (Snow Iguana) வகைப் பல்லி ஆகியவை கண்டறியப்பட்டன. இவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து, வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

 அவற்றின் பாதுகாப்பு நிலை மற்றும் உரிய சட்ட விதிகளின்படி அவற்றை மீண்டும் அனுப்புவதற்கான நடைமுறைகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

முந்தைய செய்தி
Prove tax evasion intent before invoking fraud provisions: CBIC
அடுத்த செய்தி
'Need more resilient energy supply chains amid growing global disruptions'

தொடர்புடைய செய்திகள்